எங்களைப் பற்றி

கடவுளின் நற்செய்தி அவரவர் தாய் மொழிகளிலும், தெற்காசிய மக்களுக்கான கலாச்சார புரிதலுடன் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பல காணொளி வளங்களை உருவாக்கி, பயிற்சி அளிப்பதன் மூலம், மாபெரும் நல்ல செய்தியை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ள ‘நடத்துனர்களை’ நாங்கள் தயார்படுத்துகிறோம்.

பின்கதை

ஜோசப் ஜோன்ஸ், தனது மனைவி (லீமா), மகன் (10 வயது) மற்றும் மகள் (4 வயது) ஆகியோருடன் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். அந்த ஆண்டு, சொந்த நாட்டை விட்டு பிரிந்த சோகம், சிட்னி 2000 ஒலிம்பிக்ஸ் மற்றும் புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகள் ஆகியவற்றால் குறிக்கப்பட்டாலும், ஜோன்ஸ் குடும்பத்தை மாற்றும் ஏதோவொன்றின் தொடக்கமாகவும் இருந்தது.

ஒரு நாள், லீமா பொது இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகளை தமிழில் அழைத்ததை கேட்ட
சக தமிழர் ஒருவர் கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள மற்ற தமிழர்கள் கூடும் கூட்டத்திற்கு அழைத்த பொழுது, வெளிநாட்டில் தனித்து இருந்த அந்தக் குடும்பம் மகிழ்ச்சியுடன் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டது. ஜோசப்பின் குடும்பம் வேறு மதப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த தமிழர்கள் கூட்டம் அவர்களை நீண்ட காலமாக பழகிய குடும்பத்தைப் போல வரவேற்று, உண்மையாக அன்பை அவர்களிடம் காட்டியது..

ஜோசப், தனக்கு கடவுளை தெரியும் என்று நினைத்திருந்தாலும் கடவுளின் நற்செய்தியை முழமையாக அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு வாரமும், அந்த தமிழர் கூட்டதின் விருந்தோம்பலை மகிழச்சியாக அனுபவித்து வந்தாலும், கடவுளை பற்றிய கேள்விகளை கேட்க தயங்கியதே இல்லை. ஆனாலும் அவர்கள் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகவும், அன்புடனும் விளக்கி வந்தார்கள். அவர்களது உண்மையாக அன்பு மற்றும் வேதத்தை உள்ளது உள்ளபடி விளக்கியதின் மூலமாக கடவுளின் பேரன்பை அவர் அறிந்து கொண்டார். உண்மை அவரை விடுவித்தது. அந்த உண்மையை - நல்ல செய்தியை அவரால் தனக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை.

20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜோசப் மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டு வருகிறார். அவரது மகன் ஜெஃப்ரி, அவருடன் சேர்ந்து உள்ளடக்கத்தின் கட்டமைப்பை (Structure of content) உருவாக்கினார். பல ஆண்டுகளாக ஜோசப் நிறைய கற்றுக்கொண்டார். இத்தனை வருடங்கள் தான் கற்றுக் கொண்டதை, ஒரு நன்கு கட்டமைக்கப்பட்ட காணொளி கருவியாக உருவாக்க, அவரது மகள் ஜெரி ஜோன்ஸ் ஸ்பார்க்ஸிடம் ஒப்படைத்து உள்ளார். கலாச்சார புரிதல்களுடன், அவரவர் தாய் மொழியில் நல்ல செய்தியைக் கேட்பதற்கு இந்த வளம் பங்களிக்க வேண்டும் என்பது அவர்களின் பிரார்த்தனை.

தொடர்பு கொள்ள

© நல்ல செய்தித் தொடர் 2025.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.